நெமிலி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்கு மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர் கைது!
ராணிப்பேட்டை , மே 18 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கடனை திருப்பி தராத தொழிலாளியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய வரை போலீசார் கைது செய்தனர்.ராணிப் பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சிறுவளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டு (வயது 45), கூலித்தொழி லாளி. இவருக்கு சரோஜா என்ற மனைவியும். 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பாண்டு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 48) என்பவரிடம் நகை மற்றும் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் செந்தில் நேற்று இரவு கொடுத்த பணத்தை திரும்பி கேட்க பாண்டுவின் வீட்டிற்கு சென்று, எப்பொ ழுது பணத்தை திருப்பி தருவாய் என்று கேட்டுள்ளார். இதனால் அங்கு வாக்கு வாதம் ஏற்பட்டு இருதரப்புக்கும் கை கலப்பு இதனால் ஆத்திரமடைந்த செந்தில், அம்மன் கோயில் அருகேயுள்ள மின்கம்பத்தில் பாண்டுவை கட்டிவைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது .இது குறித்து அப்பகுதி மக்கள் நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் அளித் தனர். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி பஉத்தரவின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று மின் கம்பத் தில் கட்டி வைக்கப்பட்டி ருந்த பாண்டுவை மீட்டு, செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக