நெமிலி அருகே வேட்டாங்குளம் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பரிதாப உயிரிழப்பு!
ராணிப்பேட்டை,மே 18 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட வேட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (60). இவர் நேற்று காலை வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் தனக்கு சொந்தமான 3 பசுக்களை மேய்ச் சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் மாலை மீண்டும் வீடு திரும்பும்போது அங்குள்ள விவசாய பாசன. கால்வாயில் அறுந்து விழுந் திருந்த மின்கம்பியை மிதித் ததில் 3 பசுக்கள் மின்சாரம் தாக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்து கிடந்ததை கண்டு
அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அதிகாரிகள் அங்கு வந்து மின்சாரத்தை துண்டித் தனர். மேலும் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி உத்தரவின் பேரில் நெமிலி சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் 3 பசுக்கள் இறந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக