பனப்பாக்கம் சிப்காட்டுக்காக நெடுஞ் சாலை ஆக்கிரமிப்பு பணி தீவிரம்ஓச்சேரி முதல் பனப்பாக்கம் வரை!
ராணிப்பேட்டை , மே18 -
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்கா பகுதியில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை சாலை மார்க்கமாக கொண்டு செல்வ தற்கு அகலமான சாலை வசதி தேவை என்பதால் பல்வேறு விரிவாக்க பணிகள் நேற்று முன்தினம் முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி வரை மாநில நெடுஞ்சாலைத் துறைக்குசொந்த மான இடம் எவ்வளவு உள்ளது என்று அளவீடு செய்யும் பணிகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் உமா செல்வன் தலைமையில் இந்த அளவீடு பணிகள் நடைபெற்றது. குறிப்பாக நெடும்புலி, மேலபுலம், ஓச்சேரி ஆகிய கிராமப் பகுதிகளில் அளவீடு செய்யும் பணிகள் நடந்தது. அப்போது பொது மக்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள் தரப்பில், இப்போது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு உள்ளது என்று அளவீடு செய்கிறோம். அதன் பிறகு உத்தரவு வந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனர்.இதற்கிடையே ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் ஏப்ரல் மாதத்துக்குள் தாங்களாக வே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆக்கிரமிப் புகள் அகற்றப்படும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.கால அவகாசம் முடிந்த நிலையில் கடந்த இரு நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஓச்சேரி முதல் பனப்பாக்கம் வரை தீவிரமாக
நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிந்ததும் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உமா செல்வன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப் இன்ஸ் பெக்டர் லோகேஷ், மேலபுலம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக