வேலூர் மத்திய சிறைவாசியின் மகளுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் படிப்பு உதவித் தொகை!
வேலூர் , மே 23 -
வேலூர் மாவட்டம் மத்திய சிறைவாசி யின் மகளுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் கல்வி உதவி தொகை வேலூர் மத்திய சிறைவாசியின் மகள் கல்வி பெற தமிழ்நாடு முன்னாள் சிறைவாசசிகள் ஆதரவு சங்கம் சார்பில் படிப்பு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று சிறை வாயிலில் நடைபெற்றது. வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசி யாக இருந்து வரும் பா.முருகன் 24 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தை யுடன் தண்டனையை கழித்து வருகிறார்.
மேலும் இவர் சிறையிலிருந்து விடுதலை பெற கருணை விண்ணப்பமும்கொடுத்து ள்ளார். இந்த நிலையில் தனது மகள் மு.மதுமிதா என்பர் கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள எலத்தகிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றுள் ளார் எனவும் தெரிவித்துள்ளார்.அவரது உயர்கல்வி பெற அடுத்த தலைமுறை சமுதாயத்தில் படித்து நல்ல நிலையில் மேம்படுவதற்கேதுவாக சிறைத் துறை யின் சார்பில் வேலூர் காந்திநகரிலுள்ள ஆக்சீலியம் கல்லூரியல் விண்ணப்பித்து அதனை கனிவுடன் பரிசீலித்த கல்லூரி யின் முதல்வர் ஆரோக்கிய ஜெசீலி இந்த மாணவி பி.காம் பட்டபடிப்பில் பயில்வ தற்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.
வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவர் க.சண்முகசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி இந்த மாணவி படிப்பில் பயில்வதற்குரிய கல்விக் கட்டணத்தை முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மூலம் உதவிட கேட்டுக்கொட்தன் பேரில் சிறை கண்காணிப்பாளர் பி.தர்மராஜ் முன்னி லையில் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசி கள் ஆதரவு சங்க துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பொரு ளாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் ரூபாய் பதினோராயிரத்திற்கான காசோலையினை வழங்கினர் . ஆக்சிலியம் கல்லூரி உதவி முதல்வர் அமலா வளர்மதி, தாளாளர் ஜோசப்பின் ராணி, பேராசியரும் தமிழ்நாடுஅறிவியல் இயக்க தலைவருமான பே.அமுதா தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஆர்வலர் பிரசாந் ஆகியோர் மாணவிக்கு ஆலோச னைகளை வழங்கினர். முடிவில் சிறை நல அலுவலர் ஆர்.மோகன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக