நான்கு வழிச்சாலையோடு சந்திக்கும் கிராம சாலையை அடைக்க முயன்ற சுங்கச்சாவடி நிர்வாகம் - தடுத்து நிறுத்தி மக்கள் வாக்குவாதம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

நான்கு வழிச்சாலையோடு சந்திக்கும் கிராம சாலையை அடைக்க முயன்ற சுங்கச்சாவடி நிர்வாகம் - தடுத்து நிறுத்தி மக்கள் வாக்குவாதம்


 நான்கு வழிச்சாலையோடு சந்திக்கும் கிராம சாலையை அடைக்க முயன்ற சுங்கச்சாவடி நிர்வாகம் - தடுத்து நிறுத்தி மக்கள் வாக்குவாதம்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பகுதியில் திண்டுக்கல் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது.


இதில் தேசிய நெடுஞ்சாலையில் தனக்கன்குளம் பர்மா காலணியிலிருந்து கீழக்குயில்குடி  செல்வதற்கு நெடுஞ்சாலையை கடப்பதற்கான  சந்திப்பு சாலை உள்ளது. இந்த  பாதையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


தனக்கன்குளத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து  மறுபுறம் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்  தனக்கன்குளத்தின் சுடுகாட்டுக்கும்  சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் அதேபோல் மதுரை  நகருக்குள் செல்லும் முக்கிய வழியாகவும் இந்த பாதை உள்ளது.


இந்த நிலையில் இந்தப் பாதையை விபத்தை காரணம் காட்டி கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் அடைத்து தடுப்பு சுவர் அமைப்பதற்காக பணியை இன்று தொடங்கினர் இதனை கண்ட கிராம மக்கள் பாதையை அடைத்தால் கடும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் மேலும் மாற்றுப் பாதைக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் எனக் கூறி திடீரென அங்கு ஒன்று கூடிய கிராம மக்கள் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் பாதையை அடைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இச் சம்பவத்தால் கீழ குயில்குடி விலக்கு அருகே சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad