கோடை விழாவை முன்னிட்டு உதகை அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நாய்கள் கண்காட்சி
உதகையில் மே மாதம் 2025 கோடை விழா தொடங்கியுள்ளது இதில் உதகை அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது இன்று சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் உள்நாட்டு வெளிநாட்டு நாய்கள் கலந்து கொண்டன. அந்த நாய்களின் கண்காட்சியில் நாய் வளர்ப்பு பயிற்சியாளர்களின் கட்டளைக்கு அடிபணிதல் மற்றும் அழகுற நடத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன இதில் வெளிநாட்டு நாய்கள் மற்றும் உள்நாட்டு நாய்கள் பல கலந்து கொண்டன கர்நாடகா மற்றும் உள்ளூர் நாய்கள் கலந்து கொண்டன. வெற்றி பெறும் நாய் வளர்ப்பு உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன இதை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரியில் இருந்து செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக