திருப்பத்தூரில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

திருப்பத்தூரில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி ஆய்வு!

திருப்பத்தூரில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி ஆய்வு!

சுமார் 200 க்கு மேற்பட்ட  பேருந்துகள்  ஆய்விற்காக

திருப்பத்தூர் ,மே 8 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழகம் முழுவ தும் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பிற்கு  முன்பு அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து களை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக ஆய்வு செய்வது வழக்கம்.இந்த நிலையில் தற்போது கோடை விடப்பட்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்டரம் பள்ளி  கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் 200 க்கு மேற்பட்ட   பள்ளி பேருந்துகளை  திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் இயங்கி வரும்  ஒரு தனியார் பள்ளி வளாகத்த்திற்கு கொண்டு வரப்பட்டு அனைத்து பேருந்து களையும்   மாவட்ட ஆட்சியர் சிவ சௌத் திரவள்ளி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன்,வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர் செல்வம்  ஆகியோர் பேருந்துகளை ஆய்வு  மேற்கொண்டுனர். இதில்  தீ பிடித்தால் உடனடியாக தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து ஒத்திகை காட்சிகள் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் தர சான்றிதழ் , அவசர சேவை மருத்துவ உபகரணங்கள் ,அவசர கால வழி,தீயணைப்பு கருவிகள்  செயல்பாட்டில் உள்ளதா?  பேருந்துகளின் அனைத்து ஆவணங்களும்   புதுபிக்க படுள்ளத்தா? ஓட்டுனர் நடத்துநர் உடல் ரீதியாக பாதிப்புகள் இன்றி உள்ளார்களா என பல்வேறு வகையில் பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்கும் வகையில் அனைத்து பாதுகாப்புகளும் உறுதி செய்யபட்டு டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.இதில் பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டுநர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

 செய்தியாளர்
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad