அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற ஐந்தாம் நாள் ஜமாபந்தி நிறைவு விழா! மாவட்ட ஆட்சியர் சந்திர கலா பங்கேற்பு!
ராணிப்பேட்டை ,மே 29 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகத்தில் 5 நாள் ஜமாபந்தியின் நிறைவு விழா! சிறப்பாக நடந்து முடிந்தது இந்த ஜமாபந்தி விழா! மாவட்ட ஆட்சியர். ஜே. யு. சந்திரகலா தலைமையில் மாநாடு போல் நடை பெற்றது . தாசில்தார். வெங்கடேசன் வரவேற்று பேசினார். தொடர்ந்து
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய சேர்மன். நிர்மலா அரக்கோணம் நகர சேர்மன். லட்சுமி மற்றும் விவசாய பிரதிநிதிகள். மோகன் காந்தி முதூர் காந்தி ஆகியோ ரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் ரு 2.7 கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கபடும் அரசு நலதிட்ட உதவி களை 284 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர். ஜே. யு. சந்திரகலா வழங்கினார் மேலும் நிறைவு விழாவில் அரக்கோணம் 28 வது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர். ராஜலட்சுமி வார்டு மக்களுக்கான கோரிக்கை மனு கொடுத்தார்.தணிகை போளூர் ஊராட்சி மன்ற தலைவர். வெங்கடேசன் கிராம ஒட்டர் இன மக்களுக்கான கோரிக்கை மனு கொடுத்தார்.புரட்சி தமிழ் தேசம் கட்சித் தலைவர். தண்டபாணி அருந்ததி யர் இன மக்களுக்கான கோரிக்கை மனு கொடுத்தார் டாக்டர் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை தலைவர். டாக்டர் சுகந்தி வினோதினி குழந்தைகள் நலம் சார்ந்த கோரிக்கை மனு கொடுத்தார். விழா ஏற்பாடுகளில் கிராம அதிகாரிகள் தணி காசலம் ராஜேஷ் சக கிராம அலுவலர் களுடன் இணைந்து ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக