தாராபுரம் அருகே விபத்தில் கணவன் மனைவி சாவு மகள் படுகாயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 4 மே, 2025

தாராபுரம் அருகே விபத்தில் கணவன் மனைவி சாவு மகள் படுகாயம்


திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே உள்ள  சேர்வகாரன் பாளையத்தை சேர்ந்த குழந்தான் என்பவரது மகன் நடராஜ் (43) கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி  ஆனந்தி  (38), மற்றும் மகள் தீக்‌ஷயா  (12) ஆகியோருடன் திருநள்ளாறு கோவிலுக்கு  ஆன்மீக பயணம்  சென்றுள்ளார். அதனை முடித்துக் கொண்டு நேற்று இரவு தாராபுரத்தில் இருந்து தனது மனைவி மற்றும் மகளுடன் அவரது மோட்டர் பைக்கில் சேர்வகாரன் பாளையத்திற்கு சென்றுள்ளார்.தாராபுரம் - காங்கயம் ரோட்டில்  சென்று கொண்டிருந்தபோது இருட்டில் தடுமாறி குள்ளாய்பாளையம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மோட்டார் பைக் விழுந்து  உள்ளது.அதில் நடராஜ் மற்றும் ஆனந்தி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.தீக்‌ஷயாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அறிந்த குண்டடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 3 பேரையும்  மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்த தீக்‌ஷயாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடராஜ் மற்றும் ஆனந்தி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது குறித்து குண்டடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜ் மகள் தீக்‌ஷயா 7 ம் வகுப்பும்,மகன் ரித்தீஷ் (10) 5 ம் வகுப்பு தாராபுரத்தில் உள்ள வெவ்வேறு தனியார் பள்ளியில் படித்து  வருகின்றனர். ரோடு பணியை மேற்கொண்டவர்கள் சரியான எச்சரிக்கை தடுப்பு அமைக்காத்தே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad