ஆசிரியர்களை ஒருமையில் பேசிய திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பேச்சை கண்டித்து அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு!
வேலூர் ,மே 30 -
வேலூர் மாவட்டம் ஆசிரியர்களைஒருமை யில் பேசிய திருவள்ளுர் மாவட்ட ஆட்சி யர் பிரதாப் பேச்சை கண்டித்து அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு! திருவள்ளூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர்பிரதாப் அவர் கள் ஆசிரியர்களை ஒருமையில் பேசிய தை கண்டித்து வேலூர் மாவட்டஅனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமை ப்பின் கூட்டம் 30.05.2025 மாலை 4.00 மணிக்கு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன். முகமது ஷாநவாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட இணை அமைப்பாளர் கள் ஆர்.ஜெயகுமார், ஜி.டி.பாபு, எஸ்.எஸ். சிவவடிவு, எம்.எஸ்.செல்வகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள்ஜி.சீனி வாசன்,.கே.குமார், எச்.அமிர்தராஜ்டி.ஜெய பிரகாஷ், இ.செல்லப்பா, டி.தினகரன்,
அ.ஜி .சங்கர், டி.திருமால், பி.ராஜிவ் உள்ளி ட்ட பலர் பேசினர்.பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்ற ப்பட்டது.
இக் கூட்டத்தில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், இ.ஆ.ப. அவர்களின் எதேச்சதிகாரமான, அதிகார துஷ்பிர யோக செயல்பாடுகளையும் எதிர்கால சமுதாயத்தை அழிப்பதாகவும், பணிக்கு தகுதி இல்லை என்றும் ஒருமையில் திட்டியதும் தமிழ்நாடு முழுவதும் ஆசிரி யர்கள் மத்தியில் வருத்தத்தையும் மனச் சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது
மாவட்ட ஆட்சியரின் தலையீடுகளும், ஆசிரியர்களை தரக்குறைவாக ஒருமை யில் பேசுவதும், குற்றவாளிகளைப் போல பொதுவெளியிலும் ஊடக வெளியில் திட்டுவதும் சரியான தலைமை பண்பு ஆகாது எனவே திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரின் பேச்சுக்கு கண்டனம் தெரி வித்து மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் கல்விக் கூடங்களில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் உளவியலையும் உணர்வுகளையும் மதிப்பிடாமல் 100% தேர்ச்சி என்ற புள்ளிவிவர அறிக்கையும், 100% அந்த மாவட்டம் பெற்றுவிட்டால் அந்த மாவட்ட ஆட்சியருக்கு புகழும் பாராட்டும் குறைந்தால் ஆசிரியர்கள் மட்டும் காரணம் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் ஆய்வுகளை தமிழக அரசு உடனடியாக முறைப் படுத் திட வேண்டும் கல்விக் கூடங்களில் ஆசிரியர்களின் மனங்களை கருணை கொலை செய்யும் ஆட்சியர்களின் செயல்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக அரசை யும், தமிழக முதல்வரையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
2.மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு வகையான மேம்படுத்தும் திட்டங்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு வகையான மேம்படுத்தும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாடுகளுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது.. திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியரின் மீதும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதீத தன்மையில் செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் உரிய தலையிடும் வழிகாட்டு தலும் நடவடிக்கையும் எடுத்திட வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
3.பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப்பாது காப்பு சட்டத்தினை விரைவில் நிறை வேற்றிட வேண்டுமென தமிழ்நாடு அரசி னை இக் கூட்டமைப்பு கேட்டுக் கொள் கிறது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக