அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா! சு.ரவி. எம்.எல்.ஏ. பங்கேற்பு!
ராணிப்பேட்டை , மே 30 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி யில் மாணவர்கள் 157 பேருக்கான பட்ட மளிப்பு விழா! நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலா ளர். ரவிக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோ ணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ, இந்தியாவின் முதல் ஐ பிரைட் ராக்கெட் மிஷின் டைரக்டர் ஆனந்த் மேக லிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் அரக்கோணம் ரோட்டரி சங்க தலைவர். ஆர். பி. ராஜா அதிமுக கட்சி நிர்வாகிகள். மோகன், நரேஷ் ,கே. ஆர். சீனிவாசன், சாரதி, தூர்வாசலு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் 5 பாடப்பிரிவுகளில் 10 பெண்கள் உட்பட 157 பேர் பட்டம் பெற்று கொண்டனர். பேராசிரியர் வீரமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிர்வாக அலுவலர். சுரேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார் இறுதியில் கல்லூரி முதல்வர். ஜெகநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக