திருமங்கலத்தில் திமுக சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி ஏற்று நான்காண்டு முடிவடைந்த நிலையில் தமிழக மக்களுக்கு திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழக முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட விடத்தகுளம் கிராமத்தில் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமையில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மூ மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நான்காண்டு சாதனையில் முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். அவர் அறிவித்த 556 வாக்குறுதிகள் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரமும் மக்களைத் தேடி மருத்துவமும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளார் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத மகளிருக்கு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் வந்துவிடும் ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கான ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆர்பி உதயகுமார் கப்பலூர் டோல்கேட்டை அகற்றி இருக்கலாம் ஆனால் தற்போது டோல்கேட்டை அகற்ற போராட்டம் நடத்துகிறார் ரயில்வே மேம்பாலத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் ஆனால் தற்போது மேம்பாலம் தேவை என பேசி வருகிறார் மக்களுடன் என்றும் இருப்பது திமுகவினர்தான் என்று சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் அலாவுதீன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜ் ,ஆர்.பாலாஜி மாவட்ட அணி கழக நிர்வாகிகள் கிருத்திகா தங்கப்பாண்டி, தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதன்குமார் திருமங்கலம் நகர துணை தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் கிளைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக