![]() |
ஈரோடு மாநகராட்சி 16வது வார்டுக்குட்பட்ட வைரபாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கவுன்சிலர் ஈ. பி. ரவி தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், 1வது மண்டல தலைவர் பழனிசாமி, துணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் மன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டு, மேயர் நாகரத்தினத்திடம், தங்களின் குறைகளை சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்தனர். மாநகராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் மேலும் தேவையான வசதிகளை செய்துத்தர வேண்டும் என பொதுமக்கள் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறாதவர்களுக்கு, அத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் நாகரத்தினம் உறுதியளித்தார். கூட்டத்தில், உதவி ஆணையர் சரோஜா தேவி, சுகாதார அலுவலர் தங்கராசு, சுகாதார ஆய்வாளர் கண்ணன் என அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர். பகுதி சபா கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் கவனித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக