ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் ஈரோட்டில் தொழில் துறை சிறந்து விளங்கிட, ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு சார்பில் பையர்-செல்லர்(வாடிக்கையாளர்-விற்பனையாளர்) கூட்டம் நடத்திட கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பேரில், சேலம் மாவட்டம் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்துற ைஆணையர் நிர்மல்ராஜ் தலைமையில், ஈரோடு மாவட்ட தொழில்மை மேலாளர் திருமுருகன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உணவு மற்றும் ஜவுளி, காயர் துறை நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக வருகிற ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் பையர்-செல்லர் கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்(பேட்டியா) தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம், பேட்டியா பேர் கண்காட்சி தலைவர் ஜிப்பிடி, தொழில்துறை மேம்பாட்டு குழுவின் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக