அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்று பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(29) கொத்தனார் இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஆனந்தபாலாஜி. சரவணன்.மற்றும் சிலர் சேர்ந்து கன்னியாகுமரி அருகில் உள்ள ஒரு தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அகஸ்தீஸ்வரம் பகுதியைச்(26) சேர்ந்த ரகுபாலன் என்பவர் அங்கு வந்து ஆனந்தபாலாஜி யிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அன்று மாலை ஆனந்த பாலாஜி. அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருக்கும்போது.ரகுபாலன் மற்றும் அவரது நண்பர் கிழக்கு சாலை உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சார்ந்த. முத்து என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இருவரும் சேர்ந்து ஆனந்தபாலாஜி யை கட்டையால் தாக்கியுள்ளனர்.
பின்பு அகஸ்தீஸ்வரம் சாஸ்தான் கோவில் அருகில் மணி மற்றும் சதீஷ் நின்று பேசி கொண்டிருந்தனர். இதையறிந்த இருவரும் சதீஷயும் கட்டையால் தாக்கியுள்ளனர் இதில் பலத்த காயமடைந்த இருவரும்
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்
இது சம்பந்தமாக சதீஷ் கொடுத்த புகாரின் பெயரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக