மழைக்காலங்களில் இரவு பகல் பாராமல் தனது பணியை மேற்கொள்ளும் கூடலூர் தீயணைப்பு துறையினர்
கூடலூா் பகுதியில் பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நீலகிரி நெடுஞ்சாலை துறை சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் .கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையால் ஆங்காங்கே விழும் மரங்களை தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி வருகின்றனா்.
இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது சம்பவ இடத்துக்கு கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் எப்பொழுதும் தங்களது பணியினை சிறப்புடன் செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக