மசினகுடி கல்லட்டி மலை பாதையில் வெளி மாநில வாகனங்கள் செல்ல எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது
உதகையிலிருந்து மசினகுடி முதுமலை செல்லும் மலைப்பாதை உள்ளது இந்த மலைப்பாதையில் கல்லட்டி என்ற சோதனை சாவடி உள்ளது குறுகிய வளைவு உள்ள இதில் வெளி மாநில வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் அதிகமான வெளி மாநில வாகனங்கள் தலைக்குந்தா சோதனை சாவடியை கடந்து கள்ளட்டி சோதனை சாவடி வழியாக மசினகுடி செல்ல யார் அனுமதி அளித்தார்கள் என்று தெரியவில்லை தலைக்குந்தா சோதனை சாவடியை கடந்து இந்த வாகனம் எப்படி சென்றது என்ற கேள்விக்கு விடையில்லை? இந்த புகாரை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் செரீஃப்.M.A,.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக