செய்துங்கநல்லூர. மே 3 தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கருங்குளம். வகுளகிரி சேஷத்திரம் எனவும் கூறப்படும். அங்கு வீற்றிருக்கும் வெங்கடாசலபதி கோவில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அதற்காக இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 6.15 மணிக்கு திருமஞ்சனம்.7 மணிக்கு அர்ச்சகர் ராஜேஷ் பந்தகால் பூஜை செய்தார்.
8 .15 மணிக்கு கால் நாட்டப்பட்டது.
பின்னர் 10 .15 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். தீபாராதனை நடந்தது. தினசரி சிறப்பு திருமஞ்சனம். மாலை 6 மணிக்கு சாயரட்சை. இரவு 9 மணிக்கு தோளுக்கினியான் சிம்ம வாகனம். அனுமார் வாகனம் சேஷ வாகனம் கருட வாகனம் யானை வாகனம் பொன்சப்பரம். குதிரை வாகனம் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம். பொன்னிற சப்பரத்தில் மலை இறங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். அறங்காவலர் குழுத் தலைவர் சின்னத்துரை.கல்யாணி. கருவேல முத்து. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ராமசுப்பன். சங்கர். சின்னக் கண்ணன் சோசியர் கண்ணன்
. வெங்கட்ராமன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக