குடியாத்தம் நகராட்சி புதிய கட்டிடத்தில் சாதி பெயரை நீக்க வேண்டி இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

குடியாத்தம் நகராட்சி புதிய கட்டிடத்தில் சாதி பெயரை நீக்க வேண்டி இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தல்!

குடியாத்தம் நகராட்சி புதிய கட்டிடத்தில் சாதி பெயரை நீக்க வேண்டி இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தல்!

குடியாத்தம் , மே 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி
கட்டிட வாளகத்தில் சமீபத்தில் கட்டிய கட்டிடத்தில் முகப்பு பகுதியில் ஒரு குறிப் பிட்ட தலைவரின் பெயர் அவருடைய சாதியை குறிப்பிட்டு விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. அரசு கட்டிடங்களுக்கு சாதி பெயர்கள் வைக்கக்கூடாது பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் போன்ற இடங்களில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் குடியாத்தம் நகராட்சியில் இது போன்ற சாதி பெயரில் கட்டிடங்கள் கட்டுவது ஏற்புடையது அல்ல எனவே தற்போது கட்டி முடித்துள்ள கட்டிடத்தில் உள்ள மா காத்தை மா.ஆ. வேலாயுத முதலியார் அரங்கம் முன்னாள் நகர மன்ற தலைவர் பெயருடன் உள்ள சாதி பெயரை நீக்க வேண்டும்.  மேலும் அரசு கட்டிடங்களுக்கு சாதிப் பெயரை வைப்பது அனைத்து மக்களுக்கும் சமத்துவமான அணுகு முறை யை வழங்குவதை சாத்தியமற்ற தாக்குகிறது. சமூக பாகுபாட்டை தூண்டக் கூடும் எனவே அரசு கட்டிடங்களுக்கு சாதி பெயரை வைப்பதை தவிர்ப்பது நல்லது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது எனவே குடியாத்தம் நகராட்சி புதிய கட்டிடத்தில் உள்ள சாதிபெயரை உடனே நீக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலா ளர் இராசி. தலித் குமார் குடியாத்தம் நகராட்சி ஆணையரிடம் நேரில் மனு அளித்தார் உடன் ஒன்றிய செயலாளர்கள் விஜய் ராஜ்குமார் மாவட்ட துணைச் செயலாளர் தாஸ் மாவட்ட இளைஞர் அணி மணிகண்டன் சோமு பறையனார் மற்றும் பலர் உள்ளனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad