மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் திமுக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் அணி நலச்சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 மே, 2025

மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் திமுக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் அணி நலச்சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.



மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் திமுக அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் அணி நலச்சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் திமுக அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுனர் அணி நலச்சங்கம் சார்பாக மே ஒன்றாம் தேதி 'தொழிலாளர் தினத்தை' கொண்டாடும் விதமாக, நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி அவர்களின் தலைமையில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர் அணி நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட துணை அமைப்பாளர் தலைவர் ஜீவாகண்ணன், துணைத் தலைவர் கருப்பையா, செயலாளர் பாண்டி, துணை செயலாளர் சங்கம் முருகன், பொருளாளர் கண்ணன், அமைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுனர் அணி நலச்சங்க உறுப்பினர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad