மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்தரை திருவிழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழாவானது தொடங்கப்பெற்றது. இக்கொடியற்ற நிகழ்வில் மானாமதுரை நகர்மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் சுந்தர் மற்றும் மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் திரு நிரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். மேலும் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு ஒன்பது மணிக்கு சுவாமி கற்பக விருட்ஷ வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வீதிஉலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பக்த கோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக