முத்தனேந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.
மே 1ஆம் தேதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தனேந்தல் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், முத்தனேந்தல் ஊராட்சி கிராமங்களில் நிறைவேற்றபட்ட திட்டப் பணிகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் துரை. ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ் மற்றும் உமா ராணி, பொறியாளர் கார்த்திகாயினி, ஊராட்சி செயலாளர் தமிழ்பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக