குடியாத்தம் காக்க தோப்பு அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

குடியாத்தம் காக்க தோப்பு அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்!

குடியாத்தம் காக்க தோப்பு அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்!

குடியாத்தம் , மே 12 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம்  அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்து வர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர்
டாக்டர் p. சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி செவிலியர்களின் சேவை மனப்பான்மையோடும் கடைமை தவறாமல் தனது பணியை செய்ய வேண்டும் என்று கூறி  வாழ்த்து தெரிவித்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட முன்னாள் மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன் அவர்கள்  குத்து விளக்கு ஏற்றி வைத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நோயாளிகளை தன் பிள்ளைகளை போல் அரவனைப்பாய் தன்  பணி செய்வும் செவிலியர்களின் சேவை  இன்றியமையாதது என வாழ்த்து தெரிவித்தார். அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை அனைவரையும் வரவேற்றார் .அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி அவர்கள், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k குமரவேல் மற்றும் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் k தங்கராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  
அத்தி நிர்வாக அலுவலர் சரவணன் உடன் இருந்தார். அத்தி மருத்துவ மனையின் மருத்துவர்கள், கல்லுரி பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள்  அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad