வீடுகள் மீது சாய்ந்து விழுந்து மரம் கண்டுகொள்ளாத வனத்துறை என்று மக்கள் புகார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

வீடுகள் மீது சாய்ந்து விழுந்து மரம் கண்டுகொள்ளாத வனத்துறை என்று மக்கள் புகார்


வீடுகள் மீது சாய்ந்து  விழுந்து மரம் கண்டுகொள்ளாத வனத்துறை என்று மக்கள் புகார்        


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட சோலூர் பேரூராட்சி அருகில் அமைந்துள்ள  சாண்டிநல்லா ஊரில் தற்பொழுது பெய்து கொண்டிருக்கும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்றினால் மரம் முறிந்து வீட்டின் மேல் விழுந்தது. அதிஷ்டவசமாக மரம் விழும் நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் அங்கு நடமாடவில்லை. வருடம் வருடம் அங்கு வசித்துவரும் மக்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  சம்மந்தபட்டத்துறையினருக்கு  பொதுமக்கள் நிறைய மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தில் இருக்கும் மரங்களை  அகற்றி அங்கு வசித்து வரும் மக்களுக்கு  பாதிப்புகள் ஏற்படும் முன்  உடனடியாக. நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad