தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக வெற்றி க் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அஜீதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி க்கழகம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூத்துக்குடி நகரம் முழுவதும் கோடை காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வழியில் வார்டு வார்டாக நீர் மோர் பந்தல் திறந்து தினசரி தர்ப்பூசணி மோர் ஜூஸ் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்
இந்த நிலையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நீ மோர் பந்தல் அமைப்பதற்காக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி உடன் பந்தல் அமைத்தனர் இதற்கு மாநகராட்சிநிர்வாகம் உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது இதனால்பந்தலில் பேனர்கள் கட்டக் கூடாது
உடனடியாக பேனர்களை அகற்றி பந்தலையும் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் மற்றும் அதிகாரிகள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் வாக்குவாதம் செய்தனர்
உடனடியாக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் நீர் மோர் பந்தல் திறக்க உள்ளோம் என்று எடுத்துரைத்தார் ஆனால் அதற்கு அதிகாரி உங்களது கட்சிக்கு அனுமதி இல்லை என்று மறுத்துவிட்டார் இதனால் ஆத்திரமடைந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பேருந்து நிலையம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனால் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த ஏ எஸ் பி மதன் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சாலை மறியலில் கைவிட்டனர் இதனால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
பின்னர் தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பழரசம் மோர் ஜூஸ் தர்பூசணி வாழைப்பழங்கள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக