மே தினத்தையொட்டி கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

மே தினத்தையொட்டி கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி.

மே தினத்தையொட்டி மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ் ஏற்பாட்டில்
............................
கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
..............................
உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ வழங்கினார்
.....................
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதல் படி உடன்குடி கிழக்கு ஒன்றியம் பரமன்குறிச்சி மெயின் பஜாரில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் ஏற்பாட்டில் மே தின விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் வழங்கினார். 
 இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் செந்தில் அதிபன், உடன்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாபுஜி , மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் நித்யா , மெஞ்ஞானபுரம் முத்துக்குமார், காயாமொழி மாணிக்கம் , ஒன்றிய ஆதி திராவிட நல குழு அமைப்பாளர் பொன்னுலிங்கம், 

துணை அமைப்பாளர்கள் கோபி, சுந்தரமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜாசிங் ரூபன், முத்துராஜா, ஒன்றிய சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சிங்கராஜா, ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் ரபிசன், செல்லச்சாமி , ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மகாராஜா காங்கிரஸ் பிரமுகர் பொண்ணு, கிளை செயலாளர்கள் சியோன் நகர் கிதியோன், அரங்கன்விளை லிங்கம், கஸ்பா சக்திகுமரன் , 

முருகேசபுரம் விஜயகுமார், தோட்டத்தார்விளை ரவி, சீருடையார்புரம் பேச்சிமுத்து, பிரமுகர்கள் பொத்தரங்கன்விளை கார்த்தீசன், பிள்ளையார் கோவில் தெரு முத்துக்குட்டி, பாஸ்கர், தோட்டத்தார்விளை இசக்கிமுத்து, சமத்துவபுரம் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad