தமிழக ஆசிரியர் கூட்டணியின் திருச்செந்தூர் வட்டார முப்பெரும் விழா நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, விருது பெற்ற ஆசிரியர்கள், மற்றும் விருது பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா,
திருச்செந்தூர் வட்டார 7ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்செந்தூர் ராஜ் மஹாலில் நடந்தது. வட்டாரத் தலைவர் தியாகராஜ் தலைமை வைத்தார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி கலந்து கொண்டார். வட்டார செயலாளர் சாமுவேல் செல்வின் வரவேற்று பேசினார். பொருளாளர் இம்மானுவேல் ஜெபஸ்டின் இயக்க அறிக்கை வாசித்தார். வட்டார மகளிர் அணி செயலாளர் எஸ்தர் இயக்க உறுதி மொழியை வாசித்தார்.
கூட்டத்தில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணியின் துணை பொது செயலாளர் கயத்தாறு கணேசன் சந்தன மாலை அணிவித்து வாழ்த்துரை மற்றும் இயக்க பேருரை நிகழ்த்தினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா சிங் பாஸ்கர் வாழ்த்தி பேசினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா, துணைத் தலைவர் மெர்லின், ராஜேந்திரன், ஞானராஜ், திருச்செந்தூர் வணிகர் சங்கங்களின் மண்டல தலைவர் கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார தலைவர் தியாகராஜ், செயலாளர் சாமுவேல் செல்வின், பொருளாளர் இம்மானுவேல் ஜெபஸ்டின், துணைத் தலைவர் பீர் முகமது, கதிர்வேல் ,துணை செயலாளர் ஆறுமுகம், மகளிர் அணி செயலாளர் எஸ்தர், துணை செயலாளர் சிவகாமி, வட்டார தணிக்கை குழு லீமா, தனபாய் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழகத்துடன் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக