போக்குவரத்து ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

போக்குவரத்து ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

போக்குவரத்து ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணப்பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் ZERO ACCIDENT KUMARI என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்தி சாலை பாதுகாப்பை மேம்படுத்த ரீல்ஸ் போட்டி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அவர்களுடைய படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதாக அமைந்தது. சுமார் 40 ரீல்ஸ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அனைத்து படைப்புகளும் மிகச் சிறந்தவைகளாக அமைந்திருந்தன. அதில் சிறந்த மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதல் மூன்று பரிசுகள்
மார்த்தாண்டம் எழில் மற்றும் குழுவினர்
நாகர்கோவில் அஸ்மி பாத்திமா மற்றும் குழுவினர்
களியங்காடு ஜனா மற்றும்
குழுவினர்.
வெற்றி பெற்ற மூன்று குழுவினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் மற்றும் முதல் பரிசு பெற்றவருக்கு பத்தாயிரம், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு 7000, மூன்றாம் பரிசு பெற்றவருக்கு 5000 என வழங்கப்பட்டது.
இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,இந்த ரீல்ஸ் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்ததோடு, அனைத்து படைப்புகளும் மிகச் சிறந்தவைகளாக இருந்தன அவற்றிலிருந்து முதல் மூன்று இடங்களை தேர்ந்தெடுப்பதற்கு மிகச்சிரமமாக இருந்தது என்றும், அனைவரும் மிகச் சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad