எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து அதிமுக வினர் வழிபட்டனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாளை அதிமுக வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
இதில், அதிமுக ஈரோடு சூரியம்பாளையம் பகுதிக் கழகம் சார்பில் நேற்று (மே 13) மாலை திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சூரியம்பாளையம்
பகுதிச் செயலாளரும், முன்னாள்
துணைமேயருமான கே.சி.பழனிச்சாமி
தலைமை வகித்து, தங்கத் தேரை
அதிமுக வினர் இழுத்தனர்.
தொடர்ந்து, மூலவருக்குச் சிறப்பு
அலங்காரம், பூஜை நடந்தது.
இதில், பகுதிச் செயலாளர்கள்
மனோகரன், ஜெகதீசன், தங்கமுத்து,
எம்.ஜி.பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி,
ஏ.கே.பழனிசாமி, கோவிந்தராஜ்,
சுப்பிரமணி, முனியப்பன், பொதுக்குழு
உறுப்பினர் லிங்கேஸ்வரன், சித்தோடு
பேரூராட்சி முன்னாள் தலைவர்
வரதராஜன், தீபக் பழனிச்சாமி
உள்ளிட்ட கட்சியினர் பலர்
கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக