கால்நடை தீவனம் அறுவடை பணிகள் தீவிரம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

கால்நடை தீவனம் அறுவடை பணிகள் தீவிரம் :



ஈரோடு வைரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடைகளுக்கான தீவனம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வரும் விவசாயிகள், சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்டவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி, தீவன தட்டுப்பாட்டை ஈடு செய்கின்றனர்.


ஆண்டுதோறும், கோடை காலத்தில் கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், முன்கூட்டியே விவசாயிகள் சோளத்தட்டுகளை சாகுபடி செய்து சேகரித்து வைப்பது வழக்கமாகும். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அதிகளவில் சோளத்தட்டுகள் பயிரிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரோட்டை சுற்றியுள்ள வைரபாளையம், எல்லப்பாளையம், கொங்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோளத்தட்டுகள் பயிரிடப்பட்டுள்ளன.


இந்நிலையில், தற்போது

சோளத்தட்டுகள் அறுவடை செய்யும்

பணியில் விவசாயிகள் ஈடுபட்டு

வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கால்நடைகளுக்கு தீவன

தட்டுப்பாடு ஏற்படாத வகையில்,

ஆண்டுதோறும் தீவனப் பயிர்கள்

சாகுபடி மேற்கொள்கிறோம்.

தற்போது கோடை காலத்தை

சமாளிக்க, சோளத்தட்டுகளை சாகுபடி

செய்து, அறுவடை பணிகளை

தொடங்கியுள்ளோம். இதனை

சேகரித்து வைத்து, கால்நடைகளுக்கு

பயன்படுத்துவோம். இதிலிருந்து,

சோளங்களை சேகரித்து, அவற்றை

மீண்டும் விதையாக பயன்படுத்த

சேகரித்து வைப்போம். இவ்வாறு

விவசாயிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.சந்தானம், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad