தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைத்த தண்ணீர் பந்தல் மர்ம நபர்களால் உடைப்பு
தமிழக வெற்றிக் கழகம் குமரி மேற்கு மாவட்ட கிள்ளியூர் தொகுதி முன்சிறை மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் கடந்த மாதம் 27/04/25 அன்று குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் அவர்களால் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திறந்த அன்றே சிலரின் தூண்டுதலின்படி சில பிரச்சனைகள் நடைபெற்றது அதனை முறியடித்து மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சில சமூக விரோதிகளால் மக்களின் தேவைக்கு வைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தல் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதுள்ள பயம் மட்டுமே காரணம்.இச்செயலை செய்தவர்கள் எந்த போர்வைக்குள் ஒளிந்திருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயமாக அவர்களுக்கான தண்டனை பெற்று தரப்படும்.தமிழக வெற்றி கழகம் மேற்கு மாவட்டம் சார்பாக தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக