மசினகுடி மாயார் பாலம் அருகே நடைபயின்று காட்சி தந்த புலி..
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளைக் வெகுவாக கவரும் இடங்களில் ஒன்றாக மசினகுடி விளங்குகிறது இதை சுற்றிசிங்காரா, பொக்காபுரம்,மாயார் என பல வனப்பகுதிகள் சுற்றுலாபயணிகள் மற்றும் வன ஆர்வலர்கள் விரும்பி செல்லும் இடமாக உள்ளது இந்த நிலையில் மாயார் பாலம் அருகே புலி ஒன்று சாலையை கடந்து சென்றது காடுகளின் நடுவே அமைந்துள்ள பாலம் அருகே உள்ள சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள், புலியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றதைக் கண்டதும் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர் இந்த புலியின் காட்சியால், அந்த பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக