தவளை மலை அருகில் காவல் கண்காணிப்பாளர் மண் நிஷா ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

தவளை மலை அருகில் காவல் கண்காணிப்பாளர் மண் நிஷா ஆய்வு

 


மண்சரிவு ஏற்ப்பட்ட இடத்தில் நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலை நடுவட்டம் பகுதியில் உள்ள தவளை மலை அருகில் காவல் கண்காணிப்பாளர் மண் நிஷா ஆய்வு செய்தார்:  நீலகிரி மாவட்டத்தில் சரிவு ஏற்படும் இடத்தினை காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆய்வு செய்தார் 


நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு மரம் விழுதல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் மண் சரிவு ஆகியவை ஏற்படுகின்றன இன்று காவல் கண்காணிப்பாளர் நிஷா  அவர்கள் நடுவட்டம் பகுதியில் உள்ள தவளை மலை அருகில் மண் சரிவு ஏற்படும் இடத்தினையும் மற்றும் உதகை நகர உட்கோட்ட எல்லைகுட்பட்ட மஞ்சன கோரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டு காவல்துறையினருக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்


 உடன் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கூடலூர்,  உதகை நகர உட்கோட்டம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad