தமிழக-கேரளா இணைப்பு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் அபாயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

தமிழக-கேரளா இணைப்பு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் அபாயம்


தமிழக-கேரளா இணைப்பு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் அபாயம் 


கூடலுாரில் இருந்து தேவர்சோலை வழியாக, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையில், நெலாக்கோட்டை பஜார் அமைந்துள்ளது. இங்குள்ள தாழ்வான பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.சாலையின் கீழ் பகுதியில் தொடர்ந்து மண் சரிந்து வரும் நிலையில், தொடர் மழை பெய்தால் சாலை துண்டிக்கப்படும் அபாய நிலையில் காணப்படுகிறது. மேலும், கனரக வாகனங்கள் சென்றாலும் சாலையோரம் மண்சரிவு அதிகரித்து, தமிழக-கேரளா போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிக தேர்வு ஏற்படுத்தி வருகின்றனர் பாதிக்கப்பட்ட பகுதியை, பேரிடர் கண்காணிப்பு குழு அலுவலர் சுரேஷ் கண்ணன், தாசில்தார்கள் சிராஜு நிஷா, செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சலீம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad