உங்களைத் தேடி வேளாண்மை கிராமப்புற பிரச்சாரம்என்ற புதிய திட்டத்தை காணொளி வாயிலாக துவக்கி வைத்த தமிழக முதல்வர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

உங்களைத் தேடி வேளாண்மை கிராமப்புற பிரச்சாரம்என்ற புதிய திட்டத்தை காணொளி வாயிலாக துவக்கி வைத்த தமிழக முதல்வர்

 


உங்களைத் தேடி வேளாண்மை கிராமப்புற பிரச்சாரம்என்ற புதிய திட்டத்தை காணொளி வாயிலாக துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டத்தை  விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கிராமப்புற விவசாயிகளுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வு.



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் , உங்களை தேடி வேளாண்மை என்ற திட்டத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்து, அதற்கான விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு , விவசாயிகளுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
           

இதனை தொடர்ந்து , விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,


  தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி வந்ததாக கமலஹாசன் கூறியதற்கு, மொழி குறித்து வரலாற்று அறிஞர்கள் பேச வேண்டிய பேச்சு. இது தேவையற்ற பேச்சு, நடிகர்கள் இதை கூறுவதற்கு உகந்ததல்ல,இதை வைத்து அரசியல் செய்பவர்கள், வெறுப்பு அரசியல் செய்பவர்கள் இந்த பிரச்சனையில் எண்ணெய் ஊற்றி விடக்கூடாது,இது தேவையற்ற பிரச்சனை .  தமிழர்களும் கன்னடர்களும் என்றும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் .இது போன்ற பிரச்சனைகளை பேசி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்குவது, வளர்த்து விடக்கூடாது.


அதிமுக - வை பொருத்தவரை டெல்லியில் பாஜக என்ன சொல்லுகிறதோ, அதையே செய்யும். அதிமுக அடிமை திமுக - வாக மாறி வெகு காலம் ஆகிவிட்டது.


மாநிலங்களவையில் தேமுதிகவுக்கு சீட் கொடுப்பது பற்றி, எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட முடியாது, டெல்லியில் பாஜக என்ன சொல்கிறதோ? அதன்படி தான் பழனிச்சாமி செயல்பட முடியும்.


வங்கியில் தங்க நகை கடன் வைப்பது குறித்து புதிய விதிமுறைகள் விதித்தது, நடுத்தர மக்களுக்கு பெரிதும் பாதித்துள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.


எடப்பாடி பழனிச்சாமி நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை, மாறாக நிர்மலா சீதாராமன் உடைய செயல்பாட்டுக்கு உறுதுணையாக எடப்பாடி பழனிச்சாமி இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நிர்மலா சீதாராமன் தமிழக மக்களுக்கு செய்கின்ற துரோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி துணை நிற்கிறார்.இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்மலா சீதாராமனுக்கு எதிர்த்து அறிக்கை விட தயாராக இருக்கிறாரா? எனவும் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad