திருப்பத்தூர் மாணவன் இந்தோனே சியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 மே, 2025

திருப்பத்தூர் மாணவன் இந்தோனே சியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம்!

திருப்பத்தூர் மாணவன் இந்தோனே சியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம்! 
திருப்பத்தூர்,மே 29 -

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை திருப் பத்தூர் மாவட்ட மாணவன் சாதனை! ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் உற்சாக வரவேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த சங்கர்  இந்துமதி தம்பதியினரின் மகன் ஜெகன் பிரபு  இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகி றார் இவர் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமிவில் ஆறு வருட காலமாக மாஸ் டர் பிரபு என்பவரிடம் பயிற்சி பெற்று வந்தார் இந்த நிலையில் இவர் கடந்த 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தனியார் நிறுவனம் சார்பில் இந்தோனே சியாவில் நடைபெற்ற சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி கலந்து கொண்டார்.
இதில் இந்தியா, மலேசியா, இந்தோனே ஷியா, தாய்லாந்து, மாலத்தீவு, உள்ளிட்ட ஐந்து நாடுகள் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட் பட்டவர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட ஜெகன் பிரபு  தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த் தார்.இதன் காரணமாக போட்டி முடிந்து தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவனுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க  மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

 செய்தியாளர் 
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad