திருப்பத்தூரில் தாலுக்கா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஓஆர்எஸ் கரைசல் குறித்து விழிப்புணர்வு முகாம் !
திருப்பத்தூர் , மே 29 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஈத்கா ரோடு பகுதியில் அமைந்துள்ள லைன்ஸ் ஹாலில் திருப்பத்தூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி ஓ ஆர் எஸ் கரைசல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் உணவு
கட்டுப்பாட்டு துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஓஆர்எஸ் கரைசல் எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும், எந்தெந்த அறிகுறிகள் வந்தால் அதனை பயன் படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் மருந்தாய்வாளர் சுரேஷ், உணவு கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கள் பழனிசாமி மற்றும் இளங்கோ உள்ளி ட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக