கோத்தகிரி நூலகத்தில் கோடை முகாம் நிறைவு விழா .
தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கோத்தகிரி நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வகுப்புகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. அதன் நிறைவு விழா கோத்தகிரி நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் திருமதி. மகாலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட நூலக அலுவலர் திருமதி. வசந்த மல்லிகா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோத்திகிரி நகர பஞ்சாயத்து தலைவி திருமதி. ஜெயக்குமாரி, தொழிலதிபர் அரிமா சரவணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் திரு. கே. ஜே. ராஜு, சென்னை கிருத்துவக் கல்லூரியின் கோத்தகிரி கிளை சமுதாயக் கல்லூரி முதல்வர் திரு. லெனின், தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் திரு . லிங்கன், வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் திரு. K.L. ராஜ்குமார், கீ ஸ்டோன் அமைப்பின் கள அலுவலர் திரு. மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக வாசகர் வட்ட உறுப்பினர் அனுசியா வரவேற்புரை நிகழ்த்தினார். நூலகர் சித்ரா அவர்கள் முகாம் குறித்து அறிக்கை வழங்கினார் . கடந்த ஒரு மாத கோடை விடுமுறையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். அவர்களுக்கு கணிதம், நுண்ணறிவு, வாசிப்பு, சிறப்பு கணினி வகுப்புகள் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக நெடுகுளா நூலகர் திரு. ரமேஷ் நன்றி கூறினார் .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக