தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் பொதுமக்கள் நல்லுறுவு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் பொதுமக்கள் நல்லுறுவு கூட்டம்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் வைத்து இன்று (16.05.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவலர் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அருளப்பன் உட்பட காவல்துறையினர் மற்றும் திரேஸ்புரம், அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய மீனவ இளைஞர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், உங்கள் பகுதியை சேர்ந்த குழந்தைகள் கல்வியை நன்றாக கற்றும், இளைஞர்கள் எவ்வித பிரச்சனையில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.

இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் தங்களுக்காகவும், தங்களின் குடும்பத்திற்காகவும் உழைக்க வேண்டும்.
 
ஒருமுறை இளைஞர்கள் செய்யும் தவறுக்கு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர் எந்த ஒரு அரசு வேலைக்கோ அல்லது தனியார் வேலைக்கோ செல்வதில் பாதிப்பு ஏற்படும். மேலும் அவரது எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன் அவ்ரகளது குடும்பத்தாரையும் அது பாதிக்கும், எனவே இளைஞர்கள் எவ்வித பிரச்சனையிலும் ஈடுபடாமல் தங்கள் எதிர்காலத்தை சிறந்தவையாக மாற்ற வேண்டும்,

உங்கள் பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் பெரியவர்கள், தங்கள் பகுதியில் எந்த வித பிரச்சனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, அதனால் சந்திக்கும் பிரச்சனைகளையும், பொருளாதார இழப்புகளையும் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும் அவர்களுக்கு எடுத்துக்கூறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

உங்கள் பகுதியில் சிறு பிரச்சனைகள் ஏற்படும்போது உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உங்கள் பிரச்சனையை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். 

மேலும் உங்கள் பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து (மதுபானம், கஞ்சா விற்பனை செய்பவர்கள்) காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். தகவல் தருபவர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும்.

உங்கள் பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad