கனமழை காரணமாக பழைய கட்டிடத்தின் சுவர் சரிந்தது
உதகை அருகே பிஸ்மில்லாஹ் ஹோட்டல் அருகில் பல வருடங்களாக பராமரிப்பின்றி அனாதையாக விடப்பட்ட பழைய கட்டிடத்தின் சுவர் நடைபாதை மீது முற்றிலுமாக இடிந்து விழுந்தது கனமழை காரணமாக நேற்று இரவு விழுந்ததாக கூறப்படுகின்றது
பல மாதங்களாக அபாய கரமாக விழும் நிலையில் இருந்த சுவர் சரிந்ததில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாதசாரிகள் நடப்பதற்கு நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக