குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் இல்லாத தனுஷ்கோடி அரிச்சல்முனை சுற்றுலா தலம் பயணிகள் அவதி, - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் இல்லாத தனுஷ்கோடி அரிச்சல்முனை சுற்றுலா தலம் பயணிகள் அவதி,

குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் இல்லாத தனுஷ்கோடி அரிச்சல்முனை சுற்றுலா தலம் பயணிகள் அவதி,

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டத்திலிருந்து சுற்றுலாப் பயணமாக தினசரி பயணிகள் வருகிறார்கள் இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

26.05.2025 அன்று அமாவாசை நாளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரையினர்கள் குவிந்தனர். அப்போது போக்குவரத்து சரி செய்ய போதுமான காவலர்கள் இல்லாமல் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டது.மேலும் இங்கு குடிநீர் தொட்டி பலமாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பிட வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமம் அடைத்தனர்.. 

போக்குவரத்து காவலர் ஒருவரும் இன்னொரு (பட்டாலியன்) காவலரும் பணியில் இருந்தனர்.அவர்களுக்கு நிழற்குடை கூட இல்லாமல் கடுமையான வெயிலில் பணியாற்றும் நிலையில் நூற்றுக்கணக்கான வாகனங்களை சரி செய்தனர்.இங்கே தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் கடலில் குளித்து மகிழ்கின்றனர், பெண்கள் உடை மாற்ற போதிய இடமில்லாமல் திறந்த வெளியில் உடைமாற்றுகின்றனர். 

காட்சி பொருளாக மக்களுக்கு இடையூராக இருக்கும் கண்டெய்னர் பெட்டி குப்பை நிறைந்த நிலையில் உள்ளது. ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் நுழைவாயில் வாகன நுழைவு கட்டணமும் தனுஷ்கோடி நுழைவாயிலில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த தனுஷ்கோடி சுற்றுலா தளம் உள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் கவனித்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad