மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் ஆண்டு திருக்கண் மண்டகப்படியில் பக்தக்கோடி பெருமக்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீ வீரகள்ளழகர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 29ஆம் தேதி காலை 6.55 மணியளவில் வைகை ஆற்றில் ஸ்ரீ வீரகள்ளழகர் இறங்கும் வைபோகவிழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. இவ்வினிய விழாவில் பாபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் ஆண்டு திருக்கண் மண்டகப்படிக்கு வீரகள்ளழகர் வந்து பக்தக்கோடி பெருமக்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீ வீரகள்ளழகரை பாபா பள்ளி மாணவர்கள் கள்ளழகர், மீனாட்சி மற்றும் கருப்பன் வேடமணிந்தும், நடனமாடியும், சிலம்பம் சுற்றியும் வரவேற்றனர். இதில் பக்தக்கோடி பெருமக்களுக்கு நீர், மோர், சர்பத் மற்றும் அன்னதானம் வெகு சிறப்பாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் அம்மா திருமதி பி. இராஜேஸ்வரி, பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் மற்றும் பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். இவ்விழாவிற்க்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மேற்கொண்டார்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக