CBSC தனியார் பள்ளியில் மாணவன் 491 முதல் மதிப்பெண் எடுத்து சாதனை! ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து!
திருப்பத்தூர் , மே 14 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பாராண்ட பள்ளி கூட்ரோடு பகுதியில் ஸ்ரீ விஜய் வித்யாசரம் (CBSC) தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலை யில் இங்க பத்தாம் வகுப்பு பயின்று வந்த அருள்குமார் மகன் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வசிதா ஆகிய இருவரும் 491 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்த வரை CBSC ல் இதுவே முதல் மதிபெண்
என தெரிவித்தனர் மேலும் அதே பள்ளி யைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் 489 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இதன் காரணமாக பள்ளியின் ஆசிரியர் கள் மற்றும் மாணவ மாணவியன் பெற் றோர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண் டாடினர். மேலும் அதேபோல பன்னிரண் டாம் வகுப்பில் நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக