கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 1கிலோ 400 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். மூன்று 2 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் நாகர்கோவில், இளங்கடை, பட்டறையர் சாஸ்தா நகர், பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் விஷ்ணு(32),
கிருஷ்ணன்கோவில் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (23),
சுசீந்திரம், ஆசிரமம் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார்(33) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்,
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக