குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்துவிட்டு திரும்பி செல்லும் போது சாலையை கடக்க வெகு நேரமாக சிரமப்பட்டதை பார்த்த ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பணி செய்து கொண்டிருந்த நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் ஸ்ரீதேவி உடனடி மூதாட்டி கைகளைப் பிடித்தபடி சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி மூதாட்டி சிரமம் இன்றி சாலையை கடக்க உதவி செய்தார். பெண் காவலரின் மனிதநேயமிக்க செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக