வேலூர் மாவட்டத்தில் மினி பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

வேலூர் மாவட்டத்தில் மினி பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைப்பு!

வேலூர் மாவட்டத்தில் மினி பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைப்பு!!
வேலூர் , ஜூன் 16 -

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, புதிய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மினி பேருந்து புதிய விரிவாக்க திட்டத்தினை தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 4 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் மற்றும் 14 மாற்றியமைக்கப்பட்ட பேருந்து வழித்தட ங்களை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் (16.06.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சித் தலை வர் சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்தி கேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி‌ குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி சிறப்பித் தனர். இதில் வேலூர் வருவாய் கோட்டாட் சியர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மண்டலக் குழுத் தலைவர்கள் வெங்கடே சன், நரேந்திரன், மாமன்ற உறுப்பினர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன், போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, ராஜ்குமார் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் நிர்வாகிகள், வாகன உரி மையாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என பலர் கலந்து கொண்டனர்இறுதியில் குடியாத்தம் வட்டார போக்குவரத்து மோட் டார் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா நன்றி யுரையாற்றி விழா நிறைவு பெற்றது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad