நவீன தமிழகத்தின் சிற்பி,செம்மொழி நாயகர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! .
செம்மொழி நாயகர்டாக்டர் கலைஞர் அவர்களின் 102பிறந்தநாள் விழாவில் பொள்ளாச்சி வடக்கு நகர கழகத்தின் சார்பாக., நகர மன்ற தலைவர் மற்றும் நகர கழக நிர்வாகிகள் முன்னிலையில்.,
ஜூன் 3,இன்று காலை 9.00 மணி அளவில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து இனிப்புகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது
இந்நிகழ்வில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,நகர மன்ற துணைத்தலைவர், வார்டு கழக செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், BLA2, BLC மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் டாக்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக