தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (16.06.2025), போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (16.06.2025), போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (16.06.2025), போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, 

தூத்துக்குடி மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், 

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., தலைமையில் மினிபஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்தாவது :-
பொது மக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள்/குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எல்லா பாதைகளும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் சீரான ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக புதிய விரிவான மினிபஸ் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 113 வழித்தடங்களுக்கு புதிய மினிபேருந்து சேவை வழங்க உத்தேசிக்கப்பட்டு, இன்றையதினம் முதற்கட்டமாக 27 வழித்தடங்களுக்கான மினிபஸ் சேவை தொடங்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 5 வழித்தடங்களும், திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 10 வழித்தடங்களும் மற்றும் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 12 வழித்தடங்களும் அடங்கும். இத்திட்டத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் 544.1 கீ.மீ தூரத்திற்கு புதிய மினிபஸ் சேவை வழங்கப்படுகிறது. 
 
மேலும், நீண்ட நாட்களாக பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் மினிபஸ் சேவையினை தொடங்கி வைத்துள்ளார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 27 மினி பஸ்களுக்கான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மினி பஸ் சேவையின் வழியாக ஏறத்தாழ 544 கி.மீட்டருக்கு மேல் நீளத்திற்கான கிராமப் பகுதிகளின் மக்கள் பயனடையும் வகையில் இச்சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 113 வழித்தடங்களுக்கு புதிய மினிபஸ் சேவை தொடங்கி வைக்கப்படும் என அறிவித்த்தைத் தொடர்ந்து, இன்று முதற்கட்டமாக 27 வழித்தடங்களுக்கான புதிய மினிபஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மீதமுள்ள மினி பஸ்களுக்கான சேவையும் விரைவில் தொடங்கி வைக்கப்படும். 
 
அரசு பஸ்கள் செல்லமுடியாத வழித்தடங்களில் உள்ள பகுதிகளில் இந்த மினி பஸ் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில் கிராமப்புறங்களில், குறிப்பாக பேருந்து சேவை இல்லாத கிராமங்களில் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் முத்தமிறிஞர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதன்தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். 

இத்திட்டத்தின் வழியாக அதிகமாக போக்குவரத்து வாய்ப்பு இல்லாத பகுதிகளைச் சார்ந்த மக்களுக்கும், சிறு கிராமங்களில் பஸ் வழித்தடங்கள் இல்லாத பகுதிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்கின்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மினி பஸ் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இச்சேவை எந்தப் பகுதிகளுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், விரைவில் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும். சில காரணங்களால் பேருந்து சேவை இயக்கமுடியாத பகுதிகளுக்கு விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சரிசெய்யப்படும். குறிப்பாக, மினி பஸ் இயக்கும் ஓட்டுநர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி இயக்கவும், இ-பஸ் சேவை குறித்த திட்டத்தினை சிந்தித்தால் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். 
 
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் உணர்வுகளை அறிந்துகொண்டு ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு தான், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்தார். 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது :-
புதிய விரிவான மினிபஸ் திட்டம் என்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற திட்டமாகும். மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 – 2001 ஆட்சிகாலத்தில் நேரடியாக தாளமுத்து நகரில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மாப்ளையூரணி ஊராட்சியில் இத்திட்டம் தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெருமுயற்சியால் போக்குவரத்து சேவை கிடைக்காத மக்களுக்கு இந்த மினி பஸ் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இத்திட்டம் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

பஸ் சேவைகள் வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அதனடிப்படையில் தூத்துக்குடி பகுதிக்கு 5 பஸ் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படாத பழைய வழித்தடங்களில், புதியதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் சில வழிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் அய்யனடைப்பு, சண்முகப்புரம், திரேஸ்புரம் வரையில் ஒரு வழித்தடமும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொட்டல்காடு வரையில் ஒரு வழித்தடமும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து வீரநாயக்கன்தட்டு வரை ஒரு வழித்தடமும், நிக்லேஸ் நகர் பகுதியிலிருந்து மாப்ளையூரணி வரை ஒரு வழித்தடமும், மாப்ளையூரணியிலிருந்து நிக்லேஸ் நகர் வரை ஒரு வழித்தடமும் என 5 புதிய வழித்தடங்களுக்கான மினிபஸ் சேவை கிடைத்துள்ளது. 

இதனடிப்படையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 113 வழித்தடங்களுக்கு மினி பஸ் சேவை இயக்க அனுமதி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்து சேவை இயக்கப்படாத கிராமங்களில் இச்சேவை வழங்கப்படும் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்கள். 

மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த்தாவது :-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்கள். அதனடிப்படையில் கிராமங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தையும் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள். 

அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் இன்றையதினம் தொடங்கி வைத்துள்ளார்கள். மேலும், கடந்த காலங்களில் மினி பஸ் இயக்கப்பட்டு, தற்பொழுது இயக்கப்படாமல் உள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு மேற்கொண்டு, அதனை சரிசெய்தால் கிராமங்களில் உள்ள மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பயனுள்ள அடிப்படையில் அமையும். இன்றையதினம் தூத்துக்குடியில் மக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,  மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 27வழித்தடங்களில் மினிபஸ் சேவை இயக்குவதற்கான மினிபஸ் உரிமையாளர்களுக்கு செயல்முறை ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், 13வது வார்டு மாமன்ற உறுப்பின் ஜாக்குலின் ஜெயா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏ.கே.முருகன் (தூத்துக்குடி), கிரிஜா (கோவில்பட்டி), போக்குவரத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad