பேராவூரணி அருகே பண்ணவயல் கிராமத்தில் ரூ2.47 கோடியில் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ அசோக்குமார் துவக்கி வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

பேராவூரணி அருகே பண்ணவயல் கிராமத்தில் ரூ2.47 கோடியில் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ அசோக்குமார் துவக்கி வைத்தார்

 


பேராவூரணி அருகே பண்ணவயல் கிராமத்தில்  ரூ2.47 கோடியில் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ அசோக்குமார் துவக்கி வைத்தார் 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பண்ணவயல் - கூத்தாடிவயல் சாலை, பண்ணவயல்-கம்பயங்கன்னி சாலை, பண்ணவயல் பாலத்தளி சாலை ஆகியவற்றை தார்ச்சாலையாக அமைத்தல் ஆகிய பணிகள், தமிழக முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 2 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. 


இதற்கான பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான நா.அசோக்குமார் தலைமை வகித்து  தொடங்கி வைத்தார்.


இதேபோல், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார். 


நிகழ்வுகளில், திமுக ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சு.ராஜாத்தம்பி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, திமுக இளைஞர் அணி அரவிந்த், ஒன்றிய துணைச்செயலாளர் கருணாநிதி, மாவட்டப் பிரதிநிதி பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர் முத்தமிழ் செல்வன், திமுகவினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad