மானாமதுரையில் தனியார் பள்ளி வளாக கட்டிடத்தின் 2-வது தலத்திலிருந்து கீழே குதித்த மாணவி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

மானாமதுரையில் தனியார் பள்ளி வளாக கட்டிடத்தின் 2-வது தலத்திலிருந்து கீழே குதித்த மாணவி


மானாமதுரையில் தனியார் பள்ளி வளாக கட்டிடத்தின் 2-வது தலத்திலிருந்து கீழே குதித்த மாணவி, போலீசார் தீவிர விசாரணை.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கரிசல்குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியான குட்வில் மெட்ரிக் பள்ளியில் திங்கட்கிழமை காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் இரண்டாம் தளத்திலிருந்து பள்ளி மாணவி கீழே குதித்துள்ளார். சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்து, மாணவியை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தற்போது மாணவி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவியர் மத்தியில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் பள்ளி மாணவி இரண்டாவது தளத்திலிருந்து கீழே குதித்த விவகாரம் தொடர்பாக விபத்தா? தற்கொலையா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை பள்ளியின் தாளாளர் செய்தித்து சேகரிக்க விடாமல் தடுத்த நிறுத்தி, வெளியில் செல்லுமாறு, இச்சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம், பள்ளியை விட்டு வெளியில் செல்லுமாறு கூறியுள்ளார். மேலும் இப்பள்ளியானது மாணவ மாணவிகளுக்கு கல்வி பாடங்களை பயிற்றுவிப்பதில் மிகவும் கடுமை காட்டுவதால் பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள் எப்பொழுதும் ஒருவித மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுவது வாடிக்கையான ஒன்று என பள்ளியின் பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கூடுதலாக பள்ளி கட்டிடத்தில் அனைத்து தளங்களிலும் மாணவர்கள் தவறி விழாத வண்ணம் வேலிகள் மற்றும் இன்னும் பல பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை இப்பள்ளி நிர்வாகமானது எந்த வகையில் உறுதியாக மேற்கொண்டுள்ளது என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒருவேளை பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்யாமல், தமிழக அரசு பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் பள்ளி நிர்வாகம் தவறும் பட்சத்தில் பள்ளி கல்வித்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad